Om Nama Sivaya
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.
நூற்பயன்
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங் குசமும் கருப்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க் கொருங்கில்லையே.